முன்பு சாதாரண புழக் கடைத் தொழிலாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த கோழி வளர்ப்புக்கு மகத்துவம் வந்துள்ளது. கோழி வளர்ப்பில் பல நவீன முறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். விவசாயப் பண்ணையில் எத்தகைய கவனிப்பு தேவையோ அத்தகைய கவனிப்பு அல்லது அதற்கு மேலேயே கோழிப் பண்ணைக்குத் தேவை. ஆரோக்கியமாகக் கோழிகளை வளர்ப்பதற்கும், அவற்றிடமிருந்து நிறைய முட்டைகளைப் பெறுவதற்கும் அரிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சியடைந்த கோழிகளை, முட்டைகளை உரிய முறையில் விற்பனைக்குக் கொண்டு வரவும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். இது போதும் இத்தொழிலில் வெற்றி காண்பதற்கு!
நம் வீடுகளில் சாதாரணமாக எவ்வளவோ தானியங்கள் இறைகின்றன. சாப்பிட்டுவிட்டு எறியப்படுகிற அரிசிச் சோறும், இதர பதார்த்தங்களும் கணக்கிலடங்கா. இவற்றை மட்டும் சாப்பிட்டே சில கோழிகள் நல்ல முறையில் வளர முடியும். அதாவது, நம் வீட்டில் வீணாகப் போகும் பொருள்களைக் கொண்டே சில கோழிகளுக்கு உணவிட முடியும். ‘பாழாய்ப்போவது பசுவின் வாயில்' என்று ஒரு பழமொழி வழங்குவதைப் போல் பாழாய்ப் போவது கொத்தித் திரியும் கோழி வாயில் என்று நாம் புதுமொழி ஒன்றை உண்டாக்கலாம். கோழி வளர்த்துப் பெரும் பணம் சம்பாதிக்கலாம்.
Be the first to rate this book.