லைமன் ஃப்ராங்க் பாம் 1856 மே 15 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அவருடைய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் ஏழாவது குழந்தை. அவருடைய தந்தை பெஞ்சமின் ஃப்ராங்க் ஒரு வசதியான வர்த்தகர். ஃப்ராங்க் பல தளங்களில் சிறந்து விளங்கியவர். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞர், நாடக ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல கலைகளில் வல்லுனர்.
1901-ம் ஆண்டில் அந்தக் கதை நாடகமாக்கப்பட்டு, 293 முறை மேடையேறியது. அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் நாடகம் நடத்தப்பட்டது. நாடகம் வெற்றியடைந்தது. அதில் நடித்தவர்கள் புகழ் பெற்றனர். ஒரு கதை திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. ஃப்ராங்க் பாம் 1919-ம் ஆண்டு மே 6 அன்று இறந்து
போனார். அவருடைய கதைகள் நூறாண்டுகளுக்குப் பின் இன்றும் மக்களிடம் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றன.
Be the first to rate this book.