காவிரி டெல்டாவின் திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பாசனப் பகுதிகளில் ஒன்றான முத்துப்பேட்டை தாலுக்காவையொட்டிய,நெல் விவசாயம்,தென்னை விவசாயம் செய்யும் மக்களின் வாழ்வியலை அக புற சிக்கல்களை, சாதிய, நிலவுடைமையாளர்களின் அதிகாரத்தின் பரிமாணங்களை தனது கதைகள் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் அலையாத்தி செந்தில்.
தொகுப்பின் ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் நவீன வாழ்வின் சிக்கல்களை அடையாளப்படுத்துகிறார். நடைமுறை வாழ்வின் யதார்த்தமான அலுப்பான நிகழ்வுகளை மாய யதார்த்ததின் கற்பனையால் அசாதாரண கதையாக உருமாற்றுகிறார்.உண்மையை எதிர்கொள்ள அதை பகடியாக்குவது நல்ல உபாயமாகப்படுகிறது.
Be the first to rate this book.