ஓப்பாய்வு மாற்றுச் சிந்தனை, தொன்மை நோக்கு, அறிவியல் நெறி ஆகியவற்றின் அடிப்படையில் பூங்குன்றன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் அமையும். இத்தகைய நோக்கும், ஆய்வுகளின் போக்கும் இன்றைய சூழலில் மிகவும் இன்றியமையாதது. நடுகல், வட்டெழுத்து, வேளிர், கொங்கு மண்டலம் ஆகியவற்றில் அவரின் பணி ஒரு மைல் கல்லாக அமைகிறது. தொல்லியல் ஆய்வாளர் சசிகலா அவர்கள் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளி. பூங்குன்றன் அவர்களிடம் பயின்றவர். தொல்லியல், சங்க இலக்கியம் மற்றும் பண்டைய வரலாறு குறித்த தமது கருத்துகளை ஆய்வுத்தரவுகளைக் கொண்டு தமது படைப்புகளில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டின் பண்டைய நிலைப்பாடுகளை நிறுவியுள்ளார். பெரும்பாலும் களஆய்வுகளின் மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் அமையும் இவரது ஆய்வு நெறி தனித்துவமானது. கோயிற்கலைகள் சார்ந்த ஆய்வுகளில் இவரது தமிழ்ச்சமூகத்தின் நுண்கலை பற்றிய தேடல் வரலாற்றுத்தரவுகளின் பின்புலத்தை ஆய்வு செய்யத் தூண்டுபவையாக அமையும். கோயிற்கலை மற்றும் தமிழ் இலக்கியம் தொடர்பாக பல இளம் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
Be the first to rate this book.