இது யூசுப்பின் ஆறாவது நாவல். டாக்கு ஃபிக்சன் என்று தமிழில் ஒரு வகைமை எழுத்தை முன்வைத்து புவிசார் அரசியலை இத்தனை வீரியத்துடனும் சுவாரஸ்யம் குன்றாமலும் எழுதிச் சென்றிருக்கிறார்.
ஒரு தாய்வழிச் சமூகத்தின் கதை வழியாக சூழலியல், வரலாறு, மானுடவியல், மொழியியல் என வெவ்வேறு துறைகளின் ஆவணங்களைக் கொண்டு சாதியத்தின் கொடூரமான உள்ளடுக்குகளையும், சாதிய வன்முறைக்குப் பின் இருக்கும் அரசியலையும் களமாகக் கொண்டிருக்கும் நாவல். ஒரே மூச்சில் வாசிக்கக் கூடிய க்ரைம் திரில்லர் என்றாலும் தற்காலத்தில் பெரிதும் கவனம் பெறாத ஒரு கார்ப்பரேட் ஊழலையும், நாள்தோறும் பெட்டிச்செய்திகளில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் இடம்பெறும் சாதியச் சண்டைகள், வன்முறைகளுக்கான அடிப்படைக் காரணத்தையும் துப்பறியும் நாவலாக அமைந்துள்ளது.
Be the first to rate this book.