எழுதி எழுதித் தீர்த்தாலும் கதைகளின் தாகம் நிவர்த்தியாவதே இல்லை. கேரளமாநிலம், வண்டிப் பெரியாரில் பிறந்த மு.வெங்கடேஷ் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவரை கதைகள் மீது கொண்ட தாகம் தான் இயக்கிவந்திருக்கிறது. பதாகை, சொல்வனம், ஜன்னல் போன்ற இதழியல் ஊடகங்களில் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள வெங்கடேஷ், அசலான வாழ்வின் யதார்த்தங்களைக் கதைகளாக்கும் பாங்கில் தன் மண்வாசனையை மீட்கிறார். மொழியைக் கையாள்வதன் மூலம் உணர்வுகளைக் கடத்திவிடும் வெங்கடேஷின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கொரங்கி’. அவற்றை நூலாக வெளியிடுவதில் ஜீவா படைப்பகம் பேருவகை கொள்கிறது.
- கார்த்திக் புகழேந்தி
Be the first to rate this book.