ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்ட முடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜென் கவிதைகள். எஸ்.ராமகிருஷ்ணனின் பாஷோ துவங்கி இசாவரை முக்கியமான ஜப்பானிய ஜென் கவிஞர்களையும் அவர்களின் கவிதையுலகினையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இதன் வழியே ஜென் கவிதைகளின் எளிமையையும் அடர்த்தியையும் தனித்துவமான மொழியையும் எளிதாக நாம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. என்பதே இக்கட்டுரைகளின் சிறப்பு. ஜென் நமக்குள் மாறாத சந்தோஷத்தை, அகமலர்ச்சியை உருவாக்குகிறது. ஜென் கவிதைகளின் வழியும் அதுவே. எஸ்.ராமகிருஷ்ணன் ஜென் கவிதைகள் குறித்த புரியாமையை அகற்றி நுட்பமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார்.
Be the first to rate this book.