முகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியலும் இரண்டு கண்கள். ஒன்று பழுதானாலும் சமூக ஒழுக்கம் என்கிற பார்வையும் சேர்ந்து பறிபோய்விடும். சமூகத்தை, அதன் ஒழுக்கத்தை நிலை நாட்டுவது அரசும் அரசியலுமே ஆகும். அப்படிப்பட்ட கண்களைப் பராமரிப்பது அவசியம். அதைப் பராமரிப்பவர்கள் சீராக, சரியாகச் செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது அதைவிட அவசியம். கண்காணிப்பவர்களுக்கு வழிகாட்டுதல் என்பது மிக முக்கியம். இங்கு அரசையும் அரசியலையும் பராமரிப்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள். அவர்கள் அப்பணியைச் செவ்வனே செய்கிறார்களா என்பதைக் கண்காணிப்பது வாக்காளர்களாகிய மக்களே. அவர்களுக்கு வழிகாட்டியாகத்தான் 'ஜூனியர் விகடன்' இதழில் 'சிந்தனை' பகுதியில் விழிப்பு உணர்வுக் கட்டுரைகள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், உலகில் எங்கு, எது நடந்தாலும் அதை உடனுக்குடன் சரியான சமூக நோக்கத்தோடு சிந்தனைப் பகுதியில் அரசியல் விமர்சகர் ஜென்ராம் பதிவு செய்துவருகிறார்.
Be the first to rate this book.