பாட்டுப் பாடிக்கொண்டே வெள்ளை அடிககிற அந்தோணிபோல, நீங்கள் இப்படியே எழுதிக்கொண்டு போங்கள் கண்மணிராசா. பெத்தம்மா வந்து இறங்கும் நேரத்துக்கு அழுகை பொங்கிவருவதுபோல வாசிக்கிற உருமிக்காரரும் நீங்கள்தான். வலிய கிழவனும் நீங்கள்தான். லெட்டு சுப்பம்மாவுக்குக் கொடுத்த ரீஃபிள் பேனா ஒருநாளும் தீராதபடி இன்னும் உங்கள் கையில்தான் இருக்கிறது. லாட சன்னாசி டைரிக்கு அப்புறம், கருப்பையா டைரிக்கு அப்புறம், நீங்கள் எழுதுகிற டைரிதான் உங்கள் கதைகள். தொடர்ந்து டைரி எழுதுங்கள். அரிசியில் தன்னுடைய பெயரை எழுதியவருக்கு, டைரியில் கதைகளை எழுதமுடியாதா என்ன...
- கல்யாணி. சி
Be the first to rate this book.