சமூகம், அரசியல், பெண்களின் வாழ்நிலை, இலக்கியம் எனப் பன்முகத் தளங்கள் சார்ந்த கவிதா முரளிதரனின் அக்கறைகளை இந்தத் தொகுப்பு முழுவதும் காண முடிகிறது. அறத்தின் அடிப்படையிலான அரசியல், பெண்ணியம், அடிப்படையான மானுட விழுமியங்கள் ஆகியவற்றை முன்னிறுத்திப் பேசும் கவிதாவின் கட்டுரைகள் வாசகர்களின் மன அரங்கில் சலனங்களை ஏற்படுத்த வல்லவை. தீவிரம் குன்றாமல், தணிந்த குரலில் சமநிலையுடன் பேசுவது அபூர்வமான ஒரு பண்பு. அது கவிதாவுக்கு இயல்பாகக் கைகூடியிருக்கிறது. கவிதா எழுதுவதற்குத் தேர்ந்தெடுக்கும் விஷயங்களிலும் அவற்றை அணுகும் முறையிலும் நுண்ணுணர்வும் கூர்மையும் பிரதிபலிக்கின்றன. தனது அணுகுமுறையில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் வாசகர்களோடு நட்பார்ந்த முறையில் பேசுகிறார் கவிதா முரளிதரன்.
- D.I.அரவிந்தன்
Be the first to rate this book.