இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என மானுட வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துவிடப்போகிற மே 2009 வன்னிப் பேரவலத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒன்றாக இந்த நூல் அமைகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலராக அக்காலகட்டத்தில் இலங்கையில் பணியாற்றியமையால் மிகப் பெரும்பாலானோருக்குக் கிடைக்கமுடியாத தகவல்களும் அனுபவங்களும் அதிகாரத்திற்கு அண்மையில் இருப்பதால் தெரிய வரும் சிறப்பு விவரங்களும் நூலாசிரியர்க்கு வாய்த்திருக்கிறது.
சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் அவை போன்றவற்றின் மீது ஆழமான விமர்சனங்களை முன்வைக்கிற நூலாசிரியர் இந்தப் பேரழிவில் இந்திய அரசின் பங்கையும் பொருத்தமான இடங்களில் விவரிக்கிறார்.
பக்கச் சார்பின்றி அறக்கடப்பாட்டோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் ஒருவர் உடன்பட வேண்டியதில்லை. எனினும், இந்த நூல் அம்பலப்படுத்துகிற ஏராளமானவற்றை நாம் எதிர்கொண்டேயாக வேண்டும்.
Be the first to rate this book.