வசிக்க இடமில்லாதவர்கள் என் கவிதைகளின் மீது கூடாரங்களை விரிக்கலாம். தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலை மூட்டிக்கொள்ளலாம். அர்த்தங்களை கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன்
பசிக்குச் சாப்பிட முடிகிற கவிதைகளை உருவாக்குவேன். அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக்கொடுக்கிறேன்.
Be the first to rate this book.