கொங்குநாட்டின் பழமையான மற்றும் இடைக்கால அரசியல் சமூக மற்றும் பொருளாதாரச் செய்திகளை ஒருசேரத் தரும் முதல் நூல் இதுவாகும். மூதறிஞர் இராமச்சந்திரன் செட்டியார் தொடங்கி இன்றுவரை வந்துள்ள நூல்களும், கட்டுரைகளும் பெரும்பாலும் அரசியல் வரலாற்றை மற்றும் தருகின்றன. அதனால் நூலாசிரியர் முனைவர் மாணிக்கம் சமூக பொருளாதார வரலாற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து எழுதி இருப்பது வரவேற்கவும் பாராட்டவும் தக்கது. கொங்குநாட்டுத் தனித்தன்மைகளை ஒப்பீட்டாய்வு முறையில் நன்கு வெளிக் கொணர்ந்துள்ளார். குறிப்பாக இப்பகுதியின் வேளாண் சமூக அமைப்பில் இடைக்காலம் வரை இனக்குழுச் சமூக அமைப்பின் எச்சங்கள் அதிகளவில் தொடர்ந்து காணப்பட்டன என்பதைக் கூறலாம். அதேநேரத்தில் தமிழகத்தின் ஒரு கூறு என்பதையும் கருத்தில்கொண்டு பரந்த அளவில் ஏற்பட்ட வரலாற்றுப் போக்குகளையும் உரியவகையில் பதிந்துள்ளார். ஆசிரியர், கல்வெட்டுகளில் காணப்படும் முதன்மைத் தரவுகளோடு இதுநாள்வரை வந்துள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நூல்களையும் பயன்படுத்தி இப்போதைக்கு உறுதியாகப்படும் செய்திகளை விருப்பு வெறுப்பின்றி தந்துள்ளமை ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.
Be the first to rate this book.