தொட்டால் தொடரும் படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானவர். திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, விநியோகஸ்தர், நடிகர், எழுத்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2008 - ல் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில், தன்னுடைய எழுத்து நடையாலும், வித்யாசமான கருத்தாலும், தனக்கென ஒர் வாசக வட்டத்தை பெற்றவர். 2010-ல் வெளியான இவரது முதல் நூலாகும். துறைசார்ந்த எழுத்துக்களில் இவரது சினிமா வியாபாரம் பாகம் 1 - 2 தமிழ் சினிமா வியாபாரத்தைப் பற்றிய நுணுக்கமான விஷயங்களை மிகச்சுவாரஸ்யமாகச் சொன்ன ஒரே புத்தகம் என்ற பெருமை உண்டு. இப்புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பிரபல இணையதளத்தில் தொடராய் வெளியானது.
தமிழ் சினிமா மட்டுமில்லாது தமிழ்நாட்டு கேபிள் டி.வி துறைபற்றி இவர் எழுதிய கேபிளின் கதை எனும் நூல்மிகவும் பெயர் பெற்றதாகும். ஒர் பரபரப்பான நாவலை படிப்பதற்கு ஈடான விறுவிறுப்பான அனுபவத்தை வாசகர்களுக்கு கிடைக்கப்பெற்ற நூலாகும். இவரது பலசிறுகதைகள் சிறந்த குறும்படங்களாய் வெளியாகி பரிசுகள் வென்றிருக்கிறது. விரைவில் இவரின் குறுநாவலான “மீண்டும் ஒரு காதல் கதை” திரைப்படமாக வெளிவர இருக்கிறது. கோணங்கள் இவரது பத்தாவது நூல்.
Be the first to rate this book.