ஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது என் முடிவான கருத்து. இது ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கேலிக் கூத்து. உலக இலக்கியம் பற்றிப் பேசுபவன்தான் எல்லாவித சமரசத்துக்கும் தயாராக இருப்பவர்களின் கியூவில் முதல் இடம் பிடிக்கத் துடிப்பவனாக இருக்கிறான். நீங்கள் சினிமா நடிகனை நடிகையைப் பிரபலம் என்றும், ஒரு எழுத்தாளனைச் சாமான்யன் என்றும் மதிப்பீடு செய்கிறீர்கள். தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அஃதாவது இங்கேதான் சிட்னி ஷெல்டன் மாதிரி எழுதுகிற ஒருவர் தன்னை இலக்கிய உலகம் இலக்கியவாதியாக அங்கீகரிக்கவில்லையே என்று அங்கலாய்ப்பதைப் பார்க்க முடியும். வெளிநாட்டில் உள்ள தமிழ்ச் சங்கங்களால் தமிழுக்கு இதுவரை சிறு துரும்புகூடப் பயன் இருந்ததில்லை. நம்மூர் எழுத்தாளர்களுக்கு ஹிஸ்டரி மட்டுமே தெரியும். சபால்டர்ன் ஹிஸ்டரி தெரியாது. எனவே சமூகம் என்ன சொல்கிறதோ அதையே அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வார்கள்.
Be the first to rate this book.