எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கோணல் பக்கங்களின் கட்டற்ற சுதந்திரத்தைப்பற்றி அப்போது பலரும் குறிப்பிட்டார்கள். கோணல் பக்கங்களின் பளீரென்ற உண்மைத்தன்மை பலரையும் பலவிதத்தில் பாதித்தது. பல விதமான வசைகளையும், அதற்கு ஈடான பாராட்டுகளையும் குவித்தது. சிறு பத்திரிகைகளுக்குப் பிறகு 2002 ஜனவரியிலிருந்து விகடன் இணைய தளத்தில் வெளிவந்தபோது, உலக அளவில் பரவலான கவனிப்பையும் பெற்றதால் இதற்கென்றே பிரத்தியேகமான இணையதளம் ஒன்றும் (www.charuonline.com) தொடங்கப்பட்டது இதன் சிறப்பாகும். விகடன் இணையதளத்தில் வெளிவந்த பக்கங்கள் மட்டுமே “புத்தக வடிவில்” மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கின்றன.
Be the first to rate this book.