கொமறு காரியம் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பெண்களின் தனிமையை, கைவிடப்பட்டதன் அந்தரங்கமான வலி வேதனைகளை வாசகர்களுடன் தனித்த மொழியில் பகிர்ந்து கொள்பவை. ஆதிலாவாகட்டும், பரக்கத் நிஷாவாகட்டும், நாச்சியாவாகட்டும், ஒவ்வொருவரும் ஆணாதிக்க கால்களில் மிதிபட்டு நசுங்கியவர்கள். மூடப்பட்ட இவர்களின் கதவுத் தாழினை நீக்கி காயங்களைப் பகிரங்கப்படுத்துவதே
கீரனூர் ஜாகிர்ராஜாவின் முக்கிய நோக்கம். மொழி வழியிலான புனைவின் திறத்தால் அதை அவர் கச்சிதமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.
Be the first to rate this book.