கொள்ளைக்காரர்கள் - மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது.
அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போற்றிப் பயன்படுத்துவார்கள். கொஞ்சம் அரிசியைப் போட்டுக் கஞ்சி காய்ச்சி அதைக் கிழங்கோடு சேர்த்துச் சாப்பிடுவார்கள். விழா நாட்களில் மூன்று வேளையும் அரிசிக் சோறு பொங்கி மனநிறைவோடு உண்பார்கள்.
தட்டுப்பாடு ஏற்படும் மாதங்களில் தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் விளையும் அரிசியை வியாபாரிகள் கொண்டு வந்து மேற்குக் கன்னியாகுமரியிலும் கேரளத்திலும் குவிப்பார்கள். லைசென்ஸ் வாங்கித்தான் அரிசி கொண்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்த பின்னரும் வியாபாரிகள் லஞ்சம் கொடுத்து அரிசியைக் கடத்திச் சென்று கேரளத்திலும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்திலும் விற்றுக் கொள்ளையடிப்பது வழக்கம்.
Be the first to rate this book.