ஒரு மாணவன் விடுதி நிர்வாகத்தை எதிர்த்துப் பேசினால் அந்த மாணவர் தொடர்ந்து அந்த விடுதியில் தங்கி கல்வி பயில முடியாது. பெரும்பாலான விடுதிகளில் இதே நிலைமைதான். அதனை என்னுடைய அனுபவத்தின் மூலம் இந்த நாவலில் எடுத்துக் கூறியிருக்கிறேன். அம்பேத்கர், காந்தி, அயோத்திதாசர், பெரியார் மற்றும் காரல் மார்க்ஸ் ஆகியோரையுடைய எழுத்துக்களை ஓரளவு கல்லூரிக் காலங்களில் வாசித்திருக்கிறேன். அவர்களெல்லாம் பெரிய பெரிய அதிகார வர்க்கங்களை எதிர்த்து கேள்விக்கு உட்படுத்தியவர்கள். எனவே எனக்குள்ளும் இயல்பாக அதிகார வர்க்கத்தினரை கேள்வி கேட்கின்ற மனநிலை உருவானது.
Be the first to rate this book.