கோலப்பனின் அடவுகள் (வாசகசாலை)

கோலப்பனின் அடவுகள் (வாசகசாலை)

1 rating(s)
212 ₹250 (15% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: பிரபு தர்மராஜ்
Publisher: வாசகசாலை
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2021
Book Format: Paperback
Category: நாவல்
Subject: பிற

Description

பூமி உருவாவதற்கு முன்பே கோலப்பன் பிறந்து விட்டார். கோலப்பனின் பிறப்பை அண்டப் பெருவெடிப்பில் நிகழ்ந்த ஒரு பித்தவெடிப்பாகவே நாம் பாவிக்க வேண்டும். கோலப்பனின் அக்கா பிறப்பதற்கு முன்பாகவே அவளது மகன் பாப்பச்சன் பிறந்து கோலப்பனை தாய்மாமனாக்கினான் என்பதை இந்த வரலாறு எப்போதும் சொல்லாது. ஆதாமும் ஏவாளும் அதற்குப் பிற்பாடாகவே பிறந்தனர்.

'கோல் என்பது அதிகாரம், அப்பன் என்றால் சகலத்தையும் படைத்தவன்' என்பதை ஒரு முறை சொல்லிப் பாருங்கள். கோலப்பனின் தோற்றத்தில் உள்ள பிழைகள் மறைந்து தெளிவு பிறப்பதைக் காண்பீர்கள். கோ என்றால் அரசன், கோமாதா என்றால் பசு, கோயில் என்றால் அரசனின் இல்லம், கோஷ்டி என்றால் பஜனைக் குழு, கோணையன் என்றால் கோலப்பன் என்பதாய் 'கோ' என்று துவங்கும் வார்த்தைகளுடைய பட்டியலின் நீளமானது வெகு சுவாரஸ்யமானவை.

எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு கோலப்பன் இருப்பான். எல்லா கோலப்பன்களோடும் பாப்பச்சன் இருப்பான். கடவுளும்,
சாத்தானும் என்ற கோட்பாட்டுக் கோப்பிராயங்களும் இதனுள்தான் அடங்கும். எல்லா மதநூல்களும் நன்மை தீமையென இதைத்தான் எடுத்துரைக்கின்றன. இங்கே கோலப்பனும், பாப்பச்சனும் கடவுளாகவும், சாத்தானாகவும் மாறி மாறி உருவெடுப்பதுதான் மனிதர்கள் பன்னெடுங்காலமாய் ஏறெடுக்கும் கோமாளித்தனங்களின் நீட்சி. இதற்கு
நாகரீகம் என்றொரு தெண்டித்தனமான பெயர் வேறு வைக்கப்பட்டிருக்கிறது.

எது எங்கனமோ உங்களால் கடவுளையோ, சாத்தானையோ, கோலப்பனையோ, பாப்பச்சனையோ கண்களால் காணமுடியாது. மாறாக உணர முடியும். அதையும் மீறி காண வேண்டுமென்றால் புகைப்படத்தில் இருக்கும் சர்வலோகாதிபரைக் காணுங்கள்! மோட்சம் கிட்டும்.

- பாப்பச்சன் (மருமோன் ஆஃப் கோலப்பன்)

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 
1 rating(s)
5
1
4
0
3
0
2
0
1
0

5 சிரிச்சு சிரிச்சு குட்டேல உழுந்துராதீங்க

பேஸ்புக்கில் நல்லா எழுதறாரே, சரி புக்கை படிச்சு பாப்போம்னு வாங்கினேன். சனியிரவு ஆரம்பிச்சேன். ஞாயிறு இரவு வரை ஒரு வேலையும் ஓடல. நம்மிடையே சுத்தும் பல கோலப்பன்களின் கதைகள். அதுல சில கோலப்பன்கள் நாமே தான். வழக்கமா சிறுகதை புக்கே வாங்க மாட்டேன். நாவல் தான் வாங்குவேன். இந்த மாதிரி நிஜ வாழ்வு சிரிப்புக் கதைகள் எந்த மொழியிலும் படித்ததேயில்லை. மொழி, ஜாதி, மதம், தேசியம், நாட்டுப்பற்று, அரசியல், படிப்பு, அந்தஸ்து என எல்லாவற்றையும் அடித்து வெளுக்கிறார். இது அவர் பார்த்த கதைகள் மட்டும் இல்லை. நம்மகிட்டையும் பத்து புத்தகத்துக்கு உண்டான பல சிரிப்பு கதைகள் இருக்கு. நமக்கு சொள்ளத்தெரியல. இவருக்கு எப்படி சொல்லனும்னு தெரிஞ்சிருக்கு. இத்தனை கதைகள் இவருக்குள்ள பொதிஞ்சு கிடக்குற மாதிரி பல பேருகிட்டயும் இருக்கு. இவர மாதிரி தைரியமா வெளியே வரணும். உலகின் சிறந்த சிரிப்பிலக்கியம் தமிழ் தான் என நிருபிக்கணும். அனுபவங்கள் முடியாமல் இருக்கவும், கேட்கும் கதைகள் வற்றாமல் இருக்கவும், கற்பனை மேலும் சிறகடிக்கவும் வாழ்த்துகள் பிரபு எனும் கோலப்பன் எனும் பாப்பச்சன் எனும் எல்லா நல்லது கெட்டது சேர்த்து படைக்கப்பட்ட மனிதனே. Dr. V. Hariharan, MBBS, MD

Hariharan 26-04-2021 11:10 am
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp