தமிழ் ஆய்வாளர் கணக்கில் கொள்ளவேண்டிய குறிப்பான தளம் கேரள நாட்டார் பழங்குடி மரபாகும். கேரளப்பழங்குடி வாழ்க்கையில் உள்ள சங்ககால வாழ்க்கைக்கூறுகள் வியப்பூட்டுபவை. வேலன் வெறியாட்டம் இன்றும் நடக்கிறது. வேலன் என்னும் சாதி இப்போதும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? காளியூட்டும் பெருங்களியாட்டமும் போன்ற நூறு நூறு சடங்குகள் தமிழ் வாழ்வின் அறியாத பக்கங்களைப்பற்றிய பலவிதமான தெளிவை நமக்கு அளிப்பவை. முனைவர் விஷ்ணு நம்பூதிரி தொகுத்த ’கேரள ஃபோக்லோர் நிகண்டு’ என்ற கலைக்களஞ்சியம் அளவுக்கு சங்க காலத்தமிழ் வாழ்க்கையைப்பற்றிய தெளிவை அளிக்கும் நூல்கள் குறைவே.
Be the first to rate this book.