மிகச் சிறந்த இந்திய பத்து நாவல்களில் இதுவும் ஒன்று.சிறந்த எழுத்தாளரான பிரேம்சந்தின் இந்த நாவல் , 60 வருடத்திற்குப் பின் தமிழுக்கு வந்திருப்பது மிக முக்கியமானது. இந்திய இலக்கியத்தின் முதல் முற்போக்கு சிந்தனை எழுத்தாளரான பிரேம்சந்த், இன்றும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களின் வாழ்வை தரிசிக்க மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டியவராக இருக்கிறார்.
இந்த நாவல் காட்டும் இந்திய கிராமத்தின் சித்திரம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. அடுத்தவேளை உணவு பற்றி மட்டுமே சிந்தனை செய்து செய்து வாழ் நாளை கடத்துவது எத்தனை கொடுமையானது. எத்தனை கோடி ஹோரிராம்கள் இம்மண்ணில் இருக்கிறார்கள். இந்த கொடுமையான சூழலிலும் ஹோரி தனக்கென சில கடமைகளை மனதில் நிறுத்தி நெஞ்சில் அபரிமிதமான வலிமையோடு தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கை அளிக்கும் மனவலிமை எத்தனை அசாதரணமானது.
Be the first to rate this book.