மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது, அப்படைப்பு குறித்தும், அது உணர்த்தும் செய்தி குறித்தும், படைப்புத் திறன் குறித்தும், ஏற்கெனவே வாசித்த போதிருந்த புரிதலைவிடவும் நுண்மையான பல விவரங்கள் புலனாகின்றன. மகிழ்ச்சியைத் தருகிற அந்தக் கூடுதல் புரிதலுடன், படைப்பாளியின் தொனி மாறாமல், படைப்பின் பண்பாட்டு வாசம் குன்றாமல், மொழிபெயர்க்க வேண்டுமென்ற தீராத ஆவலுடன் முனையும்போது பெயர்ப்பு மொழியின் மரபு மற்றும் பண்பாட்டுத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. அதனை வெற்றிகொள்ளும்போது கிடைக்கின்ற திருப்தி அதிக உற்சாகம் தருவதாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கான தூண்டுதலாகவும் அதுவே அமைகிறது. ஆக, மொழிபெயர்ப்புப் பணி எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாயிருக்கிறது. அதனாலேயே மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறேன்.
Be the first to rate this book.