யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்டு அவஸ்தைப் படாமல் படுத்தாமல் அனுபவ உணர்வுகளின் சாராம்சத்தால் கூர்மையடைந்து மன உணர்வுகளில் பாய்ந்து அதிர்வடையச் செய்கின்றன. இதற்கேற்ப செறிவான படிமங்களும், இறுக்கமான கவிதை அமைப்பும் உயிர்த் துடிப்புடன் வெகு இயல்பாக இணைந்து பன்முக அர்த்தத் தளத்தில் இயங்கிக் கவிதைக் கலையாகப் பரிமாணம் கொள்கிறது. இதன் காரணமாகவே இன்றைய இளங்கவிஞர்களில் சுகுமாரன் முதன்மையாக நம் கவனிப்புக்குள்ளாகிறார்.
Be the first to rate this book.