ஒருபோதும் திரும்புதல் இல்லாத பயணத்தில்
என் அறிதல்களால் நான் என்னவாக போகிறேன்.
.
ஆசையறுத்த புத்தனுக்கு
விழிகள் மூடும் இமைகள்
எதற்கு?
.
உங்களின் மாயக்கோடுக்களுக்குள்
ஒருபோதும் என் வாழ்வை எழுத
விரும்பவில்லை.
.
அலகேந்தும் இரையோடு
கூட்டுக்கு மீளும் பறவையிடம்
எளிய வாழ்வைப்
பயில முயல்கிறேன்.
.
உன் பிடித்தங்களில் இருந்து
என் மலரை உதிர்க்கிறாய்
அது உன் வேரினைப் பற்றிக் கொள்கிறது.
Be the first to rate this book.