சமூகத்தில் நடைபெறும் சில தவறுகளுக்கு, தெரிந்தோ தெரியாமலோ நாமும் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறோம். ஒரு தவறு நம் கண்முன்னே நடைபெறும்போது அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை எனில், நாம் சமூகத்தைவிட்டு ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டோம் என்றுதான் பொருள். அச்செயலுக்காக குறைந்தபட்சம் நம் எதிர்ப்பைக்கூட காட்டாதபோது, இச்சமூகத்திலிருந்து நாம் ஏதும் பெறுவதற்கு உரிமை இல்லாதவராகி விடுகிறோம். சிலருக்கு சமூக அவலங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அடிக்கடி துறுத்திக்கொண்டு மேலெழும். ஆனாலும், சிலர்தான் இதனைத் துணிந்து செய்கிறார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் இந்நூலாசிரியர் எம்.ஏ.ஜவஹர். இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்தவை. கட்டுரைகள் அனைத்தும் மத்திய&மாநில அரசுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட கணைகள்.
Be the first to rate this book.