எழுத்தாளரின் கன்னிக் கட்டுரைத் தொகுப்பு. சில அறிவியல் கட்டுரைகள்; பிற அரசியல் கட்டுரைகள். 2011ம் ஆண்டின் நொபேல் பரிசுகள் குறித்து அம்ருதா இதழில் 2011-2012ல் எழுதிய தொடர் கட்டுரைகள் இதில் பிரதானம். சர்வதேச அரசியல் மற்றும் பிற மாநில அரசியல் குறித்தும் கட்டுரைகள் உண்டு. ஒரு துறைசார் நிபுணரின் செறிவோடும் ஒரு பள்ளி ஆசிரியரின் தெளிவோடும் இவை தீட்டப்பட்டிருப்பது தனித்துவமானது. இதில் ஓர் அறிவியல் கட்டுரை பற்றி ஜெயமோகன் எழுதியது: "வழக்கமாக இவ்வகை விஷயங்கள் எழுதுபவர்கள் தாங்கள் ஏதோ அதிநுண் நிலையில் இருந்து பாமரர்களுக்காக இறங்கி வந்து எழுதுவதான பாவனையில் அசட்டு நகைச்சுவை கலந்து அரைகுறையாக ஏதாவது எழுதுவதே வாடிக்கை. சரவணகார்த்திகேயனின் கட்டுரை விஷயத்தை நன்கு புரிந்து கொண்டவருக்குரிய தெளிவுடன், கச்சிதமாக, ஆர்வமூட்டுவதாக, அமைந்துள்ளது.
Be the first to rate this book.