விளையாட்டுப் பொருட்கள் எதுவும் இல்லாத சூழலில் எதை வைத்து விளையாட வேண்டும் என்பதை குழந்தைகள் தாங்களே கண்டுபிடித்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடமோ நாடோடி வாழ்க்கையோ எத்தகைய சிரமங்கள் தங்களைத் தேடி வந்தாலும் தன் இயல்பில் தங்கள் விளையாட்டுத்தனங்களைப் பத்திரமாக வைத்து வாழத் தெரிந்தவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். மரங்களைப் பற்றிய கதைகளாகவே சொல்லிக் கொண்டிருந்த சிறுவன் ஸ்ரீஹரி குழந்தைகள் அலைபேசி பார்ப்பது பற்றிய பெரியவர்களின் பதற்றத்திற்கு தனது மாயத்தன்மை கொண்ட கதை சொல்லும் மொழியில் ஒரு புதிய கதையை உருவாக்கியுள்ளார். இயற்கையின் அழைப்பிற்கு குழந்தைகள் செவிமடுக்கத் தவறுவதில்லை என்பதும் நாய்க்குட்டியின் வழியாக கதையாகி உள்ளது.
வண்ணங்களும் இயற்கையும் சின்மயா வழியாக ஓவியமாக வெளிப்படும்விதம் குழந்தைகளை உற்சாகமான ஒரு கதைப் பயணத்திற்கு தயாராக்கிவிடுகிறது. கதையின் தன்மை மேம்படும் விதமாக நிதானமாக உருவாக்கப்பட்ட இந்த ஓவியங்கள் கதைசொல்லியையும் புதிய கதைகளை நோக்கி அழைத்துச் செல்லும் என்று நம்ப முடிகிறது.
Be the first to rate this book.