நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா? எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படமாக மாற்றி அமைத்துக்கொள்கின்றீர்கள். “ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று படித்ததும் அந்த காட்சியை மனதிற்குள் பார்க்கின்றீர்கள். “காகம் வடையைத் தூக்கிக்கொண்டு பறந்தது” என்றதும் புகைப்படம் வீடியோ காட்சியாக மாறுகின்றது. இந்தப் புகைப்படமும் வீடியோவும் உங்கள் கற்பனைத்திறனை வளர்க்கின்றது. அது உங்கள் தினசரி வாழ்க்கையை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும், பிரச்சனைகளை வேறுவடிவத்தில், வேறு கோணத்தில் அணுக உதவும். அதனால் நிறைய நிறைய வாசியுங்கள்.
- விழியன்
Be the first to rate this book.