மாணவப்பருவத்தில் கி.ராஜநாராயணின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட நான், அக்கடிதங்களின் வழியாகவே அவரது நட்பில் நுழைந்தேன். புதுச்சேரிக்குக் கி.ரா. அழைக்கப்பட்டபோது, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில் விரிவுரையாளர். 1997இல் புதுவையின் நாடகப் பள்ளியை விட்டுவிட்டு, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டாலும் இருவரிடையேயும் நட்பும் தொடர்பும் நீடித்தது.
நாற்பதாண்டு கால நட்பில் புதுவையில் கி.ரா.வோடு நெருங்கியிருந்த காலத்தை எனது நினைவுகளாகப் பதிவு செய்துள்ளேன். எனது மதிப்பிற்குரிய எழுத்தாளரும் நண்பருமான கி.ரா.வின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாத கரோனா சூழலால், சமூக ஊடகங்களில் தொடங்கிய நினைவுக்குறிப்புகள், பின்னர் இலங்கையின் உதயண் சஞ்சீவியில் ஐந்து மாதகாலம் தொடராக வந்தது.
Be the first to rate this book.