இயற்கையின் கவிஞனாக விளங்கிய கலீல் ஜிப்ரானை அவருடைய உயிர் நண்பர் மிகையீல் நைமி ‘இரவின் கவிஞன், தனிமையின் கவிஞன் ஆன்மாவின் கவிஞன், கடலின் புயலின் கவிஞன்’ என்று பெருமைப்படுத்துவார்.
‘மிர்தாதின் புத்தகம்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மிகையீல் நைமி அரபி மொழியில் எழுதிய ஜிப்ரானின் வரலாற்று நூல் இது. உயிர் போகும் தருணத்திலும் உடனிருந்த உத்தம நண்பர் உணர்ச்சி பூர்வமாக எழுதிய இந்த நூல் தான் ஜிப்ரானின் ஆதார பூர்வமான வரலாறு.
நீண்ட காலமாக ஜிப்ரானின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் கிடைக்காமல் இருந்தது. இந்த நூலை அரபி மொழியிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்ப்புச் செய்தவர் பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. அஸ்கர்.
Be the first to rate this book.