ஃபலஸ்தீனில் நயவஞ்சகத்தனமாக நுழைந்து, குறிப்பிட்ட காலங்களில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து, 1948ல் அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினர் நயவஞ்சக ஐரோப்பிய யூதர்கள். உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாக உருவெடுத்தது எனலாம். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் அதிர்ச்சியடையச் செய்தது.
ஐரோப்பிய வந்தேறிகளின் குருமதியால் ஃபலஸ்தீன மக்கள் கைசேதப்பட்டு நின்றார்கள். தொடர்ந்து யூதர்கள் தங்களுடைய கொடூரங்களை நிகழ்த்தி பெண்களையும், குழந்தைகளையும், முதியோர்களையும் கொன்று குவித்தனர். முழு ஃபலஸ்தீனையும் கைப்பற்றி விடுவோம் என்று சூளுரைத்தனர். யூதர்கள். ஃபலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க புறப்பட்டது தான் எழுச்சிமிகு ஹமாஸ் இயக்கம்.
வந்தேறிகள் ஃபலஸ்தீன மண்ணை விட்டு ஓடும் வரை, எங்களுடைய போராட்டம் தொடரும் என அறிவித்தது ஹமாஸ். முதல் இன்திஃபாழவை (மக்கள் எழுச்சி) தொடங்கியது ஹமாஸ். இந்த எழுச்சி, இஸ்ரேலிய இராணுவத்தை பின்னங்கால் பிடறியடிக்க ஓடச் செய்தது. அப்பொழுதுதான் இவர்கள் ஹமாஸைப்பற்றி புரிந்து கொண்டார்கள்.
ஹமாஸ் இருக்கும் வரை, நம்முடைய கனவு நிறைவேறாது என்பதை இஸ்ரேலியர்கள் உணர்ந்தனர். அதனால், ஹமாஸ் இயக்கத்தை அழிக்க முற்பட்டனர். இதில்தான், ஷேக் அஹ்மது யாசீன், யஹ்யா அய்யாஷ், அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி போன்ற ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாத் கொலை செய்தது. இவர்களின் இறப்புகள் ஃபலஸ்தீனில் எழுச்சியைத்தான் ஏற்படுத்தியதே தவிர, மக்களிடம் எந்தவித சோர்வையும் ஏற்படுத்தவில்லை.
இதில் பிரதானமானவரும், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவருமான காலித் மிஷ்அல் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயல்பட்டு வருகிறார். இவரைக் கொல்வதற்கு மொஸாத் செய்த முயற்சிகள் தோல்வியை தழுவின.
இதைப்பற்றிய, முழுமையான தகவல்களுடனும், காலித் மிஷ்அல் ஆளுமையைப்பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கும் நூல்தான் “ஹமாஸ் இயக்க முன்னோடி, காலித் மிஷ்அல்” என்ற புத்தகம்.
Be the first to rate this book.