நேர்காணல்கள் இவை.என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குபெரிய யோசனை ஏதுமில்லாமல் அந்தந்த நேரத்தில் தோன்றியதைப்பதில்களாகச் சொல்லியிருக்கிறேன். மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கையில் வெவ்வேறு காலத்தில் நான் உளறிக்கொட்டியவைகளின் தொகுப்பாகத் தோற்றம் கொள்கிறது.
என் மனதின் ஆழத்தில் ஊடுருவிச்செல்லும் கேள்விகளை வெளியிலிருந்து யாரும் கேட்டுவிட முடியாது என்பதும் புலப்படுகிறது கேள்வி கேட்பவர்.
என்னைப்பற்றி என்னதான் புரிந்து வைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் தருணங்களாகவும் இவை அமைந்துள்ளன. பெரும்பாலும் சமநிலைப்பட்ட மனநிலையோடுதான் பதில்களைச் சொல்லியிருக்கிறேன். சங்கிகள் நம்மை அப்படி இருக்க விட மாட்டார்களே. திரு.ஆர்.மகாதேவன் முடிந்தவரை என்னைக் கோபப்படுத்தி அதன் வழி பதில்களைப் பெற முயற்சித்திருக்கிறார் . இதற்கும் கூட நாக்பூரில் பயிற்சி கொடுக்கிறார்களோ என்கிற ஐயம் எனக்கு அப்போது எழுந்தது.
Be the first to rate this book.