* சிறந்த சிறுகதைத் தொகுப்பு - 2017 வாசகசாலை விருது
* சிறந்த சிறுகதைத் தொகுப்பு - 2017 ஆனந்த விகடன் விருது
* சிறந்த அறிமுக சிறுகதை எழுத்தாளர் - 2017 க.சீ.சிவக்குமார் நினைவு விருது
எழுத்தின் ஒரு வகையில் உச்சம் தொட்டவர்களை அதன் ஏதேனும் இன்னொரு வகையும் எப்போதும் கைநீட்டி அழைத்தபடியே இருக்கும். அந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிது நரனின் இந்தப் புனைவுகள். மொத்தம் பதினோரு கதைகள் ~ ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலங்கள், வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு உலகங்கள் என்று சாத்தியப்படுத்தியிருக்கிறது, இவரின் எழுத்து.
இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன்று சமர்த்தான இளைய புனைகதையாளனாக வந்து நிற்கிறார் நரன். நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் தமிழ் சிறுகதைகளில் பரவலான தளங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், இவரின் கதைக்களங்கள் இதுவரை பேசப்படாதவை. இக்கதைகளின் யுத்தியும், வெற்றியும் அதுவே. அதனால்தான் இவை அவ்வப்போது பிரசுரமானபோதே எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தன, பேசவைத்தன, விவாதிக்கவைத்தன, பாராட்டவைத்தன. குறிப்பாக பல முக்கிய எழுத்தாளர்களின் பாராட்டுதல்கள்தான் நரனின் அடுத்தடுத்த சிறுகதைகளின் படிக்கட்டுகளாகின.
நரனின் கவிதைகளுக்கு தனியே ரசிகர்கள் அமைந்ததுபோல், இந்தச் சிறுகதைகள் தொகுப்பாகும் முன்பே பல்லாயிரம் ரசிகர்களை அவருக்கு ஆனந்த விகடன், தடம், உயிர்மை வழியே உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. அதை இக்கதைகளை படிக்கும்போது நம்மனசும் சொல்லும்.
ஓரிடத்தில் கைதட்டல் வாங்கிவிட்டு இன்னோரிடத்திற்குப் போகும்போது அங்கு கைதட்டலை உடனே எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஆரவாரமான கைதட்டலுடன்தான் கவிதையிலிருந்து ~ புனைகதைகளுக்குள் நுழைந்திருக்கிறார் நரன் – தொடரும்.
இந்தத் தொகுப்பு ஃப்ரெஞ்ச் புத்தகங்களைப் போல அளவிலும் நூலின் கட்டமைப்பிலும், பக்கங்களின் வடிவமைப்பிலும் தனித்த அழகுடன் அசத்தல். புத்தகத்தை கையில் எடுக்கும்போதே வேறொரு மனநிலை வந்துவிடுகிறது. இது சால்ட் வெளியீட்டின் சிறப்பு.
Be the first to rate this book.