கேரளாவின் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, கேரளா கடவுளின் தேசம் என்பது வெற்று வாசகமல்ல. பச்சைப்பசேலென்று பரந்து விரிந்த நிலப்பரப்புகள், வெள்ளை நிறத்தில் ஓடும் நதிகள், நீலநிறக் கடல் பகுதிகள், பசுமையான மலைப்பகுதிகள், மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் என்று கேரளா முழுவதும் குவிந்து கிடக்கும் இயற்கை அழகு, சுற்றுலா செல்பவர்களின் மனக்குறைகளைப் போக்கி மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. இந்த இயற்கை அழகுடன் சேர்ந்து அமைந்திருக்கும் கேரளக் கோயில்கள், வழிபட்டுச் செல்பவர்களின் வருத்தங்களைப் போக்கி வாழ்க்கையை வளமடையச் செய்கிறது என்றால் அது மிகையில்லை. இந்நூலில் கேரளாவிலுள்ள 50 கோயில்கள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
Be the first to rate this book.