இந்தக் கட்டுரைகளின் ஊடாக ஒரு காலமும் பயணிக்கிறது. அந்தப் பேருந்தில் ஏறி உடன் பயணிக்கும் பல்வேறு நில மனிதர்கள் இப்புத்தகம் எங்கும் விரவி இருக்கிறார்கள். காலம் என்றால் மனிதர்கள் மட்டுமா? யானைகளும் கூடத்தான். யானைகள் இருக்கிற காட்டில் எறும்புகளுக்கும் இடமுண்டு என்பதைப் போல, பல்வேறு விலங்கினங்களும்கூட இப்புத்தகத்தில் குறுக்கே மறுக்கே ஓடுகின்றன. ஜீவராசிகளில் ‘ட்யூனா’ என அழைக்கப்படும் கேரை மீன் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில் அதுவொரு சாகசப் பயணி. வாழ்நாள் முழுவதும் கடலின் குறுக்காக எல்லைகள் கடந்து, தனக்கென ஒருதடம் போட்டுப் பயணம் செய்தபடியே இருக்கிறது. ஓரிடத்தில் தேங்கி மடிகிற மீன் அல்ல அது.
- சரவணன் சந்திரன்
Be the first to rate this book.