18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரத்பூரின் மகாராஜா ராஜா சூரஜ்மால் கேவலாநாத் கோயிலுக்கு அருகில் ஓர் அணையைக் கட்டுவித்துப் பறவைகளை ஈர்ப்பதற்கானச் சதுப்பு நிலத்தை உருவாக்கினார். 1850இலிருந்து பறவைகளை வேட்டையாடுதல் என்பது பணம்படைத்தோரிடையே பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. 1976இல் இந்த இடம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டதோடு அந்த கொடூரப் பழக்கம் முடிவுக்கு வந்தது. இங்கு இந்தியப் பறவைகள் மட்டுமல்ல, சைபீரியா போன்ற தொலைதூர நாடுகளிலிருந்து நாரைகளும் வருகின்றன. பறவை அவதானிப்பிற்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த இடமாக இது உள்ளது. 1985இல் இது உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டது. இதன் சோகமான மற்றொரு பக்கம் என்னவென்றால், அக்கம்பக்கக் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் கால்நடைகள் இங்கு மேய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுதான்.
Be the first to rate this book.