தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல, தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ். இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான தவிஞர்.இவர் தான் என்றார். பூனையை, தக்காளியை, ரொட்டியை, மக்காச்சோளத்தை, எனுமிச்சையை, உப்பினை, வெங்காயத்தை சுவிதைகளாக உருமாற்றியவர், கவிதையின் வரையறைகளைக் கலைத்தவர். ஒரு கவிதையை எழுதுவதற்கான முறையினை எந்தப் புத்தகத்திலிருந்தும் தான் கற்றுக் கொண்டிருக்கவில்லை என்ற நெரூதா, தனது நீண்ட பயணத்தில் அதற்கான பங்களிப்புகளை பூமியிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் பெற்றதாகச் சொன்னார். கவிதைக்கலை என்பது "அற்ப ஆயுளுடையதோ அல்லது வீறார்ந்ததோ, அதில் சமப் பங்களிப்பவையாக இருக்கும் தனிமைவாசம் மற்றும் கூட்டொருமை, உணர்ச்சிகள் மற்றும் செயல்பாடு, தன்ளிலையுடனான மனிதகுலத்தினுடனான அருகாமை, அப்புறம் இயற்கையின் இரகசிய வெளிப்படுத்தல்கள் ஆகியவற்றின் ஒரு வினை" என்று தனது நோபல் பரிசுரையில் குறிப்பிட்டார். பிரம்மராஜனின் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு நெருதா வருகிறார் கவிதைகளோடும் கேள்விகளின் புத்தகத்தோடும்: கொடுங்கோன்மையை இசுழ்ந்தவாறும், தேனீக்களை, ஈக்களை, திராட்சைகளை, செர்ரிப்பழங்களை, மக்காச்சோளக் கதிர்வயல்களை. பாப்பி மலர்களை, இலையுதிர் காலங்களை, வண்ணத்துப் பூச்சிகளை, பட்டுப்புழுக்களை, கோளகங்களை, வறியவர்களை, கடவுளை, பாலைவனங்களை, ஆறுகளை.
-இரா.சுகந்தன்
Be the first to rate this book.