பிரச்னைகளும் தீர்வுகளும் வாழ்க்கை முழுவதும் தொடரும் அம்சங்கள். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், இயந்திர வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்குத் தங்கள் பிரச்னைகளை சக மனிதர்களிடம் ஆறஅமரச் சொல்லி, தங்கள் துயரங்களுக்கு வடிகால் தேடிக்கொள்ள அவகாசமில்லை. அதிலும் வேலைக்குச் செல்லும் பெண்களும் சரி.. கல்லூரி மாணவிகளும் சரி.. தங்கள் அந்தரங்கப் பிரச்னைகளை யாரிடமாவது சொல்லித் தீர்வு பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு யோசனை சொல்பவர்களும் ஆதாரபூர்வமற்ற, விஞ்ஞான விளக்கமற்ற பொத்தம் பொதுவான கருத்துகளைச் சொல்லி அவர்களை மேலும் சிக்கலில் ஈடுபடுத்தும் நிலையைக் காண்கிறோம். இந்தக் காரணங்களாலேயே, 'அவள் விகடன்' படிக்கும் எண்ணற்ற வாசகிகளிடமிருந்து எங்களுக்கு ஒரு வேண்டுகோள் வந்தது. 'எங்கள் வேதனைகளையும் ஆதங்கத்தையும் வெளியிட பக்கங்கள் ஒதுக்கக் கூடாதா? தெளிவான, சரியான பதில் கிடைத்தால் எங்கள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் இருக்குமே..!_ என்பதுதான் அந்த வேண்டுகோள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட பகுதிதான் 'கேளுங்கள்.. சொல்கிறோம்!'
Be the first to rate this book.