நிலத்தின் மாந்தர்கள் அரசியல்படுத்தப்பட்டாலும் அரசியல்படாதவர்களாக இருக்கிறார்கள்.
அவர்தம் நம்பிக்கைகள் அவர்களை வழிநடத்துகின்றன.
வழிநடத்தப்பட்டதாலேயே பாதிக்கப்படுபவர்களாகவும், அவற்றையே கட்டிக்காப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இறுதியில் எல்லாவற்றிலும் பலியாவது....?
தனது முதல் நாவலிலேயே மிக அழுத்தமான கதையை நிலத்தின் வழக்கு மொழியில் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்.
ஒரு வாழ்க்கை பறிக்கப்பட்ட கொடுந்துயரத்தின் எதிரில் ஒரு பெருங்கொண்டாட்டம் நிகழ்வது தான் 'கெளிமதம்'.
இக்கெளிமதம் வட்டார நாவலாக இருந்தாலும் ஒரு பெருநிலத்தின் கீழ்மையை இப்படியான பெருமிதங்களில் மறைத்துக்கொள்வதை பலரும் உணர முடியும், மேலும், இந்த எழுத்தாளரைப் போலவே வட்டார மொழியும் இலக்கியப் பரப்பில் புதுவரவு எனச் சொல்லலாம்.
Be the first to rate this book.