நெகிழ்வின் அற்புத கணங்களைக் காட்சிப் படிமங்களாக இயங்கச் செய்திருக்கும் தமிழ் சினிமாக்களின் வரிசையில் ஒரு முக்கியமான படம் ‘கேளடி கண்மணி’.இது வஸந்தின் படைப்பு மனோபாவத்தையும் படைப்பாற்றலையும் உறுதி செய்த படம்.
தமிழ்ச் சினிமாவின் சிறந்த படங்கள் எல்லாமே வெகுஜன ரசனைக்குரிய காட்சி அமைப்புகளையும்,மனித உறவுகள் சார்ந்து மலரும் நெகிழ்ச்சியான காட்சிப் படிமங்களையும் ஒரு லயத்தோடு இணைக்கும் புனைவுகளாகவே உருவாகியிருக்கின்றன.
இப்படம் முழுவதும் முதலிலிருந்து கடைசி வரை,மனித மனங்களின் உள்ளுணர்வு சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்த கேள்வியும் புதிரும் இழையோடிக் கொண்டிருக்கிறது.மொன்னையான,பொதுப் புத்தி சார்ந்த,தர்க்கரீதியான பதில்கள் முஉளம் கேள்விகளையும் புதிர்களையும் காயடிக்காமல் அவற்றை வாழ்வின் அகண்ட வெளியில் விந்தையோடும், வியப்போடும், புதிரோடும் பார்த்துக்கொண்டிருக்கிறார் வஸந்த்.ஒரு படைப்பாளிக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடிய ஸ்திதி இது.
- சி. மோகன்
Be the first to rate this book.