பொதுவுடமை இயக்கத்தின் தலைமையில் கீழத்தஞ்சைப் பகுதியில் நடந்த விவசாயிகள் இயக்கம் ஒரு வீர காவியத்தின் இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தியது.அதுமட்டுமல்லாமல் வர்க்கங்களாகவும்,சாதிகளாகவும் குறுக்கும் நெடுக்குமான பிரிவுகளாகவும் பலதட்டு சமூகக் கட்டுமானமாகவும் இருக்கும் இந்தியாவில்,வர்க்கப் போராட்டத்தையும்,சமூக நீதிக்கான போரட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்துவது எப்படி என்பதற்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டு ஆகும்.சுதந்திரத்திற்கு முன்பு அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியால் துவங்கப்பட்டு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தொடரப்பட்ட நீண்ட போரட்டத்தின் தீரமிகு வரலாறு இந்நூல்.
Be the first to rate this book.