தமிழ் இலக்கிய வெளியின் முக்கிய கவிஞர்களுள் ஒருவர் கரிகாலன். இந்நூலில் அவர், சமகால தமிழ்க் கவிதைகள், கவிஞர்கள் குறித்து உரையாடுகிறார். சமகாலக் கவிஞர்கள், கவிதைப் போக்குகள் குறித்து கவிஞர்கள் எழுதுவது வழக்கமே. டி.எஸ்.எலியட் கவிஞராக மட்டுமன்றி கவிதை விமர்சகராகவும் இயங்கியிருக்கிறார். தமிழ்ச் சூழலில் பசுவய்யா, பிரம்மராஜன், விக்ரமாதித்யன், இந்திரன் போன்றவர்கள் கவிதை, கவிதை விமர்சனம் என இரு துறைகளிலும் செயல்பட்டிருக்கிறார்கள். அவ்வகையில் கரிகாலனும் 90 களின் தமிழ்க் கவிதை இயக்கம் குறித்து ’நவீன தமிழ்க் கவிதையின் போக்குகள்’ எனும் நூலை எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, புத்தாயிரத்தில் தமிழ்க் கவிதையின் போக்குகளை விவாதிக்கும் நூல்தான் கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்க் கவிதை அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியை விளங்கிக் கொள்ள இந்நூல் துணை செய்யும். நவீன தமிழ்க் கவிதையியல் குறித்த விவாதத்தை வளர்த்தெடுக்க ’கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்’ கவிதை ஆர்வலர்களுக்கு உதவுமென நம்புகிறோம்.
Be the first to rate this book.