கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.
Be the first to rate this book.