ஏழைகளின் உணவு என்று அழைக்கப்படும் கீரைகள், இன்று எல்லோராலும் "விரும்பி" ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. கீரைகளில் இல்லாத சத்துகளே இல்லை என்றும், தங்கத்தைவிடவும் மதிப்புமிக்கது என்று சொன்னாலும் அது மிகைஇல்லை. "தினம் ஒரு கீரை. விரட்டும் உங்கள் நோயை" என்பதற்கு ஏற்ப, இந்தப் புத்தகத்தில் 55 கீரைகளின் மருத்துவக் குணங்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
மேலும், கீரைகளால் உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? கீரைகளை எப்படியெல்லாம் சமைத்துச் சாப்பிடலாம்? உடல் மற்றும் மன நலத்தைக் கீரைகள் எப்படிப் பாதுகாக்கின்றன? கீரைகளில் உள்ள சத்துகள் என்னென்ன? பருவ காலங்களுக்கு ஏற்ப எந்தெந்த கீரைகளைச் சாப்பிடலாம்? என்பது உள்ளிட்ட, கீரைகள் தொடர்பான பல கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் கீரைகள் பற்றிய பல அரிய, சுவாரசியமான தகவல்களுடன் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. உணவுகளை ருசிக்காகச் சாப்பிடாமல், உடல் நலத்துக்காகச் சாப்பிடுங்கள் என்பதற்குச் சரியான உதாரணம் கீரைகள் என்பதை உணர்ந்து, தினமும் உணவில் கீரைகளைச் சேர்த்துப் பயன்பெறுங்க
Be the first to rate this book.