இத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மையான பாடல்கள் பெண்களால் பாடப்பட்டவை.ஒவ்வொரு பாடலிலும் பெண் குரலை நம்மால் கேட்க முடிகிறது. பெண்ணாகப் பிறந்தாலும் சாதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஒடுக்கப்படும் பெண்,அதனை எவ்விதம் மடைமாற்றம் செய்து கொள்கிறார் என்பதற்கான அரிய பதிவாக இவை அமைந்துள்ளன. கீழத் தஞ்சைப் பகுதி என்பது நிலவுடைமையாளர்கள் பண்ணை ஆட்கள் என்ற முரணில் கட்டப்பட்டது ஆகும். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து இதனால் இப்பகுதி தனித்து அமைந்துள்ளது. இத்தனித்தன்மை மக்களின் வழக்காறுகளில் பதிவாகியுள்ளதை இத்தொகுப்பு வழி அறிகிறோம்.
Be the first to rate this book.