விளிம்பு நிலையில் ஒதுங்கிக் கிடக்கும் குமரி மாவட்டத்தின் விளவங்கோட்டுத் தமிழை எந்தத் தயக்கமுமின்றி எழுத்துக்குக் கொண்டுவந்தவர் குமாரசெல்வா. தமிழ்ச் சிறுகதை மரபிலிருந்து விலகி, வாய்மொழிக் கதைகளின் அகச்சாயலை சுவீகரிக்கும் இவரது கதைகள் அதனூடே வாழ்வின் அபூர்வத் தருணங்களையும் துக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன.
“அனுபவ உலகில் வாழும் மனிதர்களின் மனமொழியோடு படைப்பு மொழியை முடிந்தமட்டும் நெருக்கியிருப்பதில் தமிழுக்கு சோபைகள் சேர்ந்திருக்கின்றன” என்று இவரது கதைகள் குறித்து எழுதியிருக்கிறார் சுந்தர ராமசாமி.
Be the first to rate this book.