சங்கப் புலவர்கள் ஞானிகளைப் போன்றவர்கள். அவர்கள் தமக்கென்று எதையும் வைத்துக் கொண்தில்லை. அவர்கள் பரிசு பெற்றனர். ஈட்டியதையெல்லாம் கொடுத்தனர். மீண்டும் தமிழைத் துணைக்கு வைத்துக் கொண்டு அரசனுக்கு முன்னே நின்று கவி பாடினர். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர் பாடிய பாடலைக் கேட்டு பெருங்களிப்புக் கொண்டான். அதற்காக நூறாயிரம் காணம் பொன்னையும், நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணிற் கண்ட நாடெல்லாமும் அளித்தான். அவற்றையெல்லாம் அயலாருக்கு வழங்கி அதிலே இன்புற்று மீண்டும் பரிசிலராகவே வாழந்தார் கபிலர். இப்படித்தான் அன்றைய புலவர்கள் வாழ்ந்து சென்றனர். சொந்த வாழ்க்கையை ஒழுங்காகத் திட்டமிட்டு நடத்த அவனால் முடியாது. அந்தத் திட்டத்தில் ஈடுபட்டால் காவியம் பாட இயலாது. அதனால் சராசரி வாழ்க்கைக்கு லாயக்கற்றவன் கவிஞன்.
Be the first to rate this book.