காவிய அரங்கம் ஒன்று அமைக்கின்றார், இவ் அறிஞர்; அந்த அரங்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்; கம்பர் காவியத்தில் உள்ள பதினொரு பாத்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாய் அவ்வரங்கில் ஏற்றுகின்றார்; கலையின் ஒளியை அப்பாத்திரங்களின்மீது பாய்ச்சுகின்றார்; அரங்கத்தின் மருங்கே நின்று அவற்றின் பண்புகளை விளக்கிக் கூறுகின்றார். இடையிடையே ''எப்படி இருக்கிறது; பார்த்திர்களா?'' என்று கேட்கின்றார்.''அடாடா! என்ன விருந்து, என்ன விருந்து'' என்று வியக்கின்றார்; 'பேஷ் பேஷ்' என்று ஆவலம் கொட்டுகின்றார். 'அவசரப்பட வேண்டாம்' என்று கையமர்த்துகின்றார்.
Be the first to rate this book.