'அய்வான கஜல்' என்ற தலைப்பில் உருது மொழியில் முதலில் வெளியான இப்புதினம்,
கலைப் பெருமை கொண்டு சீர்கெட்டுப் போன சமூகத்தின் கதையைக் கூறுகிறது. சுரண்டலையும் மூடநம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு குற்றுயிராகிப் போன சமயச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கிறது. கவிதை புனைவதிலும் சிற்றின்ப நுகர்ச்சியிலும் நாட்டம்கொண்டு மங்கி மறைந்து வரும் பெருமையிலும் செல்வச் செழிப்பிலும் குளிர்காய்கின்றவர்களின் கோட்டையாக 'கவிதாலயம்' சித்தரிக்கப்படுகின்றது.
ஆற்றொழுக்கான நடையும், கவிதைக்குரிய துள்ளலும் இப்படைப்பின் சிறப்பம்சங்கள். புகழ்பெற்ற உருது எழுத்தாளரான ஜீலானி பானுவின் சிறுகதைகள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.